சென்னை: ஓபிசி வருமான வரம்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். சம்பள வருமானத்தை வைத்து மட்டுமே ஓபிசி பிரிவினரை வசதி படைத்தவர் என்று முடிவு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் சம்பள வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்ற தீர்ப்பை முதல்வர் வரவேற்றுள்ளார். அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினர் சேர்வதற்கு இருந்த தடைகளை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
