கட்டுமான பொருட்கள் விலையேற்றம் நாளை காரைக்குடியில் வேலை நிறுத்த போராட்டம்

காரைக்குடி, பிப்.11: கட்டுமான பொருட்கள் தொடர் விலையேற்றத்தை கண்டித்து நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அகில இந்திய கட்டுனர் சங்க காரைக்குடி அமைப்பின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அகில இந்திய அளவில் கடந்த சில மாதங்களுக்குள் கம்பி, சிமென்ட், மின்சாதன பொருட்கள் உள்பட கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுத்த பணிகள் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், பொதுமக்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வலியுறுத்தி இந்திய அளவில் கட்டுநர் சங்கம் சார்பில் நாளை வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. காரைக்குடியில் பஸ் ஸ்டாண்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

Related Stories:

>