×

மத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்

காரைக்குடி, பிப்.11: காரைக்குடியில் இந்திய மருத்துவ சங்கம் செட்டிநாடு கிளை சார்பில், ஆயுர்வேதம் படித்த டாக்டர்கள் நவீன மருத்துவ ஆபரேசன் செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு கண்டித்தும். ஆயுர்வேதா கவுன்சில் குறிப்பானையை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஐஎம்ஏ முன்னாள் மாநில தலைவர் சுரேந்திரன், செட்டிநாடு கிளை தலைவர் தேவகுமார், செயலாளர் ஜோதி கணேஷ், பொருளாளர் நடேசன் உள்பட ஏரளமானோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் சுரேந்திரன் கூறுகையில், அறுவை சிகிச்சை என்பது கடினமான படிப்பு. பயிற்சியை அடித்தளமாக கொண்டது. 4 ஆண்டுகள் ஆயுர்வேதா படித்து 6 மாதம் அறுவை சிகிச்சை பயிற்சி பெற்றபின் ஆபரேசன் செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவு பொதுமக்களுக்கு ஆபத்தாக முடியும். எனவே தான் அலோபதி மருத்துவம் படித்த 6 லட்சத்துக்கும் மேற்பட்ட டாகடர்கள் தொடர் எதிப்பை காட்டி வருகிறோம். கடந்த ஆண்டு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறோம். மசோதாவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.

Tags : Doctors ,government ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை