நாளை வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை, பிப்.11: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் “வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நாளை, காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம். இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>