போதையில் தாயை தாக்கிய வாலிபர் கைது

சாயல்குடி, பிப்.11:  முதுகுளத்தூர் அருகே மேலக்கன்னிச்சேரியை சேர்ந்தவர் வெள்ளத்துரை மகன் முனீஸ்(எ) முனியசாமி(31). இவர் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி ஜெயிலுக்கு சென்று விட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் தன்னை கம்பால் அடித்து, துன்புறுத்தியதாக முனியசாமி தாய் வழிவிட்டாள் பேரையூர் போலீசாரிடம் புகார் அளித்தார். முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிந்து, முனியசாமியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ போதை மாத்திரை, இரண்டு அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>