மேலூர் அருகே பட்டப்பகலில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை திருட்டை காட்டி கொடுத்ததால் தீர்த்து கட்டினர்

மேலூர், பிப். 11: மேலூர் அருகே பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலூர் அருகேயுள்ள பேப்பனையன்பட்டியை வெள்ளைச்சாமி (29). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு உறவுக்கார பெண்ணான பவானியுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மேலூர் பூதமங்கலம் சாலையில் வெள்ளைச்சாமி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்ததும் மேலூர் டிஎஸ்பி ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த ஆடு திருட்டை போலீசில் தெரிவித்த முன்பகை காரணமாக இக்கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கீழவளவு போலீசார் இக்கொலை தொடர்பாக அட்டப்பட்டியை சேர்ந்த அய்யனார் (25), பிரபு, தர்மர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில் 2 கொலை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>