×

சிலிண்டர் தட்டுப்பாடு யாரும் பயப்பட வேண்டாம்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு

திருச்சி பஞ்சப்பூரில் நேற்று மாலை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்நாடு மற்றும் அதன் கலாச்சாரத்திற்கு மதிப்பளிப்பது என்னும்போது நம்முடைய அரசாங்கம் எப்போதுமே முன்னணியில் இருக்கும். இப்போது நமது அரசாங்கம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்த்தியிருக்கின்றது. இதனால், விவசாயிகளால் காலையில் பறிக்கப்படுகின்ற ‘மதுரை மல்லி’, பாரிஸ் நகர் அல்லது நியூயார்க் நகரின் கடைகளுக்கு அன்று மாலைக்குள் கொண்டு சேர்க்கப்படும். நிதிப்பகிர்வை பொறுத்தமட்டிலே தமிழ்நாட்டின் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமானது.

2014ம் ஆண்டு தொடங்கி 3 லட்சம் கோடி ரூபாய் நிதிப்பகிர்வு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழகத்தின் வளர்ச்சிக்கென நாம் பெரிய திட்டங்களை வைத்திருக்கின்றோம். உதாரணமாக நாம் அரிய கரிம வளம் இடைவெளியின் ஒரு பகுதியாக இந்த மாநிலத்தை ஆக்கியிருக்கின்றோம். பெங்களூரு – சென்னை மற்றும் சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் இடைவெளிகளை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். இந்த திட்டங்கள் செயல்பட வேண்டும் என்று சொன்னால், மக்கள் நலனை விட, மக்கள் நலனை அரசியலை விட மேலானதாக வைக்கக்கூடிய அரசாங்கம் இங்கே தேவை.

என்டிஏவால் மட்டும்தான் அத்தகையதொரு அரசாங்கத்தை அளிக்க முடியும்.நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கான ஒதுக்கீட்டை சட்டம் இயற்றி உறுதி செய்தது நம்முடைய அரசாங்கம்தான். பெண்களுக்கான அதிகாரப்பகிர்விலே நமக்கிருக்கும் அர்ப்பணிப்பை இது காட்டுகின்றது. முக்கியமாக, நான் தமிழகத்தின் மக்களிடத்திலே மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பற்றி பேச விரும்புகிறேன். இது உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி வழங்கல் சங்கிலிகளை பாதித்திருக்கின்றது. இந்தியாவிற்கே முதன்மை என்ற கொள்கையிலே நாம் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தியர்களின் நலன்களுக்கே நமது அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

இந்த சூழலிலும் கூட நமது அணுகுமுறை அதே மாதிரிதான் இருக்கும். நீங்கள் யாரும் பயப்பட தேவையில்லை, பீதி அடைய தேவையில்லை (சிலிண்டர் தட்டுப்பாடு). வதந்திகளை நம்பாதீர்கள். நாம் சரியான தகவலை மட்டுமே பரப்ப வேண்டும். சரிபார்க்கப்பட்ட தகவல் அதை மட்டுமே பரப்புரை செய்ய வேண்டும் என்று மக்களே நான் உங்களிடத்திலே வேண்டி கேட்டுக்கொள்கிறேன். கோவிட் பெருந்தொற்று காலத்திலே நாம் எப்படிப்பட்ட முதிர்ச்சியுடைய தேசம் என்பதை 140 கோடி இந்தியர்கள் உலகிற்கு எடுத்துக்காட்டினார்கள். ஒரு தேசம் என்ற வகையிலே ஒவ்வொரு சூழ்நிலையையும் நாம் வெற்றிகரமாக கடந்து நாம் கடந்து செல்வோம் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

தமிழ்நாட்டின் வரலாற்றிலே வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. மக்கள் முன்பாக இருக்கும் தேர்வு தெளிவாக இருக்கின்றது. வளர்ச்சி வாய்ப்பு, நாணயமான ஆளுகை ஆகியவற்றை நோக்கி இன்னொரு பாதை அழைத்து செல்கிறது. மக்களிடம் ஆழமான அறிவு இருக்கின்றது. அதன்மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம். திருச்சி மக்களே! உங்கள் குரல் மாநிலம் எங்கும் எதிரொலிக்க வேண்டும். நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

* எடப்பாடி புகைப்படம் மிஸ்சிங் இந்தியில் மோடி போஸ்டர்கள்
திருச்சி பஞ்சப்பூரில் பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பேனரில் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படம் இருந்தது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதை பார்த்து அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று இந்தியில் அச்சடிக்கப்பட்ட வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Modi ,Trichy ,National Democratic Alliance ,Panchapur, Trichy ,Tamil Nadu ,Madurai airport ,
× RELATED அன்னைக்கு நான் இல்லன்னா உசுரு காலி;...