×

மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முக்காடு போட்டு மறியல் 80 பேர் கைது

மதுரை, பிப். 11: மதுரையில் முக்காடு போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 9வது நாளாக மாவட்ட அரசு ஊழியர் சங்க இணை செயலாளர் சந்திரபாண்டி தலைமையில், தலைவர் மூர்த்தி, செயலாளர் நீதிராஜா முன்னிலையில் அரசு ஊழியர்கள் மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள சர்வேயர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சாலைமறியிலில் ஈடுபடுவதற்கு புறப்பட்டு வந்தனர். அப்போது பெண்கள், ஆண்கள் என அனைவருமே முக்காடு போட்டு வந்தனர். அவர்களை திருவள்ளுவர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள், அதே இடத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர்.

Tags : servants ,Madurai ,
× RELATED தடய அறிவியல் துறையில்...