சோழவந்தானில் பேரூராட்சி இயக்குனர் திடீர் ஆய்வு

சோழவந்தான், பிப். 11: சோழவந்தானில் கட்டப்பட்டு வரும் புதிய மார்க்கெட், பஸ்நிலைய பணிகளை பேரூராட்சி இயக்குனர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் பணிகள் குறித்து எம்எல்ஏ மாணிக்கம், உதவி

இயக்குனர் சேதுராமன், செயல்அலுவலர் ஜீலான் பானு ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பேரூர் செயலாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் மணிமாறன், இளநிலை பொறியாளர் கருப்பையா, இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், தூய்மை பணி மேற்பார்வையாளர் திலீபன் சக்கரவர்த்தி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

More
>