சீட்பெல்ட் அவசியம் குறித்து ஊர்வலம்

மதுரை, பிப். 11: மதுரையில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பாக சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் பங்கேற்ற நான்கு சக்கர வாகன ஊர்வலம் நேற்று நடந்தது. மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், தெப்பக்குளம் வரை சென்றது. ஊர்வலத்தை மாநகர போக்குவரத்து காவல் துணை கமிஷனர் சுகுமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், போக்குவரத்து காவல் உதவி கமிஷனர்கள் திருமலைக்குமார், மாரியப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories:

>