பக்தர்களின் பயன்பாட்டுக்காக பழநி கோயில் தங்கும் விடுதிகள் இன்று திறப்பு

பழநி, பிப்.11: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன. தற்போது அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி இன்று (வியாழக்கிழமை) முதல் பழநி கோவில் தங்கும் விடுதிகள் பக்தர்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது. அவ்வாறு பதிவு செய்ய வரும் பக்தர்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் தங்க அனுமதி கிடையாது. தங்கும் விடுதிக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அறைகளில் தங்க அனுமதி வழங்கப்படும். வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி செய்து கைகளை சுத்தம் செய்த பின்னரே அறைகளில் தங்க அனுமதிக்கப்படுவர்.

Related Stories:

>