நத்தம் வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

நத்தம், பிப்.11: நத்தம் வடக்கு ஒன்றியம் குடகிப்பட்டி ஊராட்சி மணக்காட்டூரில் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற திமுக கொறடாவுமான அர.சக்கரபாணி எம்எல்ஏ, ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோர் பேசினர். இதேபோல் நத்தம் வடக்கு ஒன்றிய பகுதிகளான வேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, சிறுகுடி ஆகிய பகுதிகளில் பேரூர் கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கும், நத்தம் கோவில்பட்டியில் தெற்கு ஒன்றிய முகவர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, நகரசெயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் பதுருஸ்ஸமான், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், முன்னாள் ஒன்றியபொருளாளர் வீரன், துணை ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முருகேசன்,

குப்புச்சாமி கலந்து கொண்டனர்.  நத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான காந்தி கலையரங்கை திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ ஆய்வு செய்தார். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>