தை அமாவாசை ஏற்பாடுகள் தீவிரம் இன்று தை அமாவாசை ரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க முன்னேற்பாடு

திருச்சி, பிப்.11: தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதை யொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் பித்ருதோஷம் நீ்ங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இன்று தை அமாவாசையாகும். ஆடி அமாவாசையின்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் திதி கொடுப்பதற்காக தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் திதி கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் இன்று (11ம்தேதி) நடைபெறவுள்ள அமாவாசையின்போது திதி கொடுக்க இதுவரை அரசின் சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. காவிரி ஆற்றின் ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தை அமாவாசையின் போது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் கொடுப்பது வழங்கம்.

இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் விசாரித்தபோது, அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு தடை எதுவும் இல்லை என்றனர். தொடர்ந்து கூட்டம் அதிகளவில் வருவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கவனித்து வருகின்றனர். மேலும் மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் ரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் 200 போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை மாற்றிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More