×

200 போலீசார் பாதுகாப்பு சர்வேயருக்கு சரமாரி அடி, உதை

அரியமங்கலம் தெற்கு உக்கடை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக்(54). இவர் தனக்கு சொந்தமான இடத்தை தனது மகளுக்கு பட்டா பெயர் மாற்ற அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். கோட்ட அலுவலகத்துக்கு வந்து சர்வேயர் மணிவேலை (30) சந்தித்து, விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்று கேட்டார். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அப்துல் ரசாக், சர்வேயர் மணிவேலை அடித்து உதைத்தார். காயமடைந்த மணிவேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் சர்வேயர் தன்னை தாக்கி விட்டதாக கூறி, அப்துல்ரசாக்கும் சிகிச்சை பெற்று வருகிறார். பாலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி அருகே கஞ்சா விற்றவர் கைது: திருச்சி மத்திய பஸ் நிலையம் பாரதியார் சாலையில் உள்ள பள்ளி அருகே பைக்கில் வைத்து கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மலைப்பட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் (47) என்பவரை கண்டோன்மென்ட் சப்இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 2 கிலோ 900 கிராம் கஞ்சா, ரூ.2,610 ரொக்கம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி: திருவானைகோவில் நரியன் தெரு ராம் நகரை சேர்ந்தவர் டிரைவர் சிக்கந்தர் பாட்ஷா. இவரது மனைவி தனலட்சுமி (20). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை தூங்கி எழுந்த தனலட்சுமி, லைட் போடுவதற்காக சுவிட்ச்சை போட்ட போது மின்சாரம் தாக்கியதில் இறந்தார். ரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி: பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் டேவிட்ராஜ் (19). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 8ம் தேதி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நள்ளிரவு வரை பார்ட்டியில் கலந்து கொண்ட டேவிட், அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். நேற்றுமுன்தினம் அதிகாலை எழுந்த டேவிட்ராஜ், மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். பொன்மலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கூலித்தொழிலாளி கருகி சாவு: உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்தவர் லதா. இவரது மகன் கார்த்தி (41). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. மனைவி இறந்த மனவேதனையில் இருந்த கார்த்தி, அங்கிருந்து உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள ஜெயராம்நகருக்கு குடியேறினார். கடந்த 8ம் தேதி இரவு போதையில் வீட்டிற்கு வந்த கார்த்தி படுத்துவிட்டார். காலையில் அவரது அறையில் புகை வருவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது கார்த்தி போதையில் சிகரெட் பற்ற வைத்தபடி தூங்கியதும், அது படுக்கையில் விழுந்து தீ பிடித்து காயம் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கார்த்தி இறந்தார். அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலர் மோதி மூதாட்டி பலி: துறையூரை அடுத்த கண்ணனூர் நெசவாளர் காலனி முத்துகிருஷ்ணன் மனைவி பாப்பாத்தி அம்மாள் (60). டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்து வரும் இவர் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எதிரே பேருந்து நிற்கும் இடத்திற்கு செல்ல சாலையை கடந்தபோது, டூவீலர் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். டூவீலர் ஓட்டிவந்த சொரத்தூரை சேர்ந்த சண்முகம் மகன் சரவணனை பலத்த காயத்துடன் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...