×

சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்து 6 பேர் உயிரிழப்பு..!!

பெர்ன்: சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெர்ன் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெர்செர்ஸ் நகரில் பேருந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற முயன்றனர். 3 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனாலும், இந்த தீ விபத்தில் பேருந்தில் இருந்த 6 பயணிகள் உடல்கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் குழுக்கள் வரவழைக்கப்பட்டு 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பேருந்தில் தீ பற்றியது எப்படி மற்றும் இதில் சதிச்செயல் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Swiss ,Bern ,Gerserse ,
× RELATED இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும்...