×

13ம் தேதி நடக்கிறது தஞ்சை பகுதியில்

தஞ்சை, பிப்.11: தஞ்சையில் கார் கண்ணாடியை உடைத்து பொருட்கள் திருடிய திருச்சியை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை புதிய பஸ் நிலையம், ரயிலடி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை உடைத்து பொருட்கள் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் மனோகரன், தலைமைக் காவலர்கள் கோதண்டபாணி, சிங்காரவேல், சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் மர்ம நபர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தஞ்சையில் ஒரு இடத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். முன்னதாக அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து அந்த வாலிபர்களை மடக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த குணசேகரன் (30), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா ராமையார்பட்டி குடிதெருவை சேர்ந்த ரகுபதி (25) என்பதும் அவர்கள் தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் நூதனமுறையில் கார் கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த வாட்ச், லேப்டாப், கைப்பை, பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து குணசேகரன், ரகுபதியை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பொருட்களை மீட்டனர். மேலும் இதில் மற்றொரு வாலிபருக்கும் தொடர்பு உள்ளதால் அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறும்போது: குணசேகரன், ரகுபதி மற்றும் தலைமறைவாக உள்ள வாலிபர் ஆகியோர் மீது திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளது. இவர்கள் தனியாக நிறுத்தப்பட்டிருக்கும் காரை நோட்டமிட்டு கண்ணாடியை உடைத்து பொருட்கள் திருடுவர். இவர்களில் ஒருவர் யாராவது வருகிறார்களா? என பார்த்துக் கொண்டிருப்பார். மற்ற இருவர் லாவகமாக சத்தமே இல்லாமல் கார் கண்ணாடி உடைத்து பொருட்களை திருடுவர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுவர். தற்போது எங்களிடம் பிடிபட்டுள்ளனர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags : area ,Tanjore ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...