×

தஞ்சை வழியாக செல்லும் அனைத்து ரயிலையும் மீண்டும் இயக்ககோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.11: தஞ்சாவூர் வழியாகச் சென்ற அணைத்து ரயில்களும் மீண்டும் இயக்க வலியுறுத்தி நாளைமறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக ரயில்கள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு பேருந்துகள் உள்ளிட்ட பயணிகள் இயக்கம் முழுமையாக இயக்கப்படும் நிலையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் அன்றாடம் வேலைசெய்வோர், ஏழை,எளிய , நடுத்தர மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் , மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர், படிக்க செல்லும் மாணவ -மாணவியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ரயில்கள் இயக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நிலையில் சுமார் 50 பேருந்துகளின் தேவையை ஒரு ரயில் இயக்கம் பூர்த்தி செய்கிறது. கட்டண குறைவும், பாதுகாப்பான பயணமும் ரயில்கள் இயக்கத்தில் உள்ளது.

எனவே தஞ்சாவூர் வழியாக இயக்கப்பட்ட திருச்சி -மயிலாடுதுறை , வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால், திருநெல்வேலி உள்ளிட்ட பயணிகள் ரயில்கள், தொலை தூர விரைவு ரயில்கள் இயக்கப்படவேண்டும். மேலும் விரைவு ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், முதியோர், பெண்கள், ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண குறைவு சலுகை பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கை குறித்து தென்னக ரயில்வேயை வலியுறுத்தி நாளை மறுநாள் (13ம் தேதி) காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சமூக ஆர்வலர்கள், அனைத்து இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tags : Demonstration ,Tanjore ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...