டிரைவர்களுக்கு மனஅழுத்த பயிற்சி

மன்னார்குடி, பிப். 11: 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி அனைத்து வகை ஓட்டுநர்களுக்கான சிறப்பு மன அழுத்த பயிற்சி முகாம் மன்னார்குடியில் நடை பெற்றது. இப்பயிற்சி முகாமில், வாகனத்தில் செல்லும் ஓட்டுனர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான நுட்பங்கள் குறித்தும், பணியின்போது மன அழுத்தம் ஏற்படும் பட்சத்தில் அதை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது.  இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் பங்கேற்று பேசுகையில், ஓட்டுனர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அதீத நம்பிக்கையே தேவையற்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது என்றார்.

Related Stories:

>