×

கலெக்டர் தகவல் குப்பைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை சிறப்பு தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

திருவாரூர், பிப்.11: திருவாரூர் குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை கலெக்டர் மூலம் சிறப்பு தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் கொத்த தெருவில் கடந்த டிச. 14ம் தேதி குப்பைமேடு ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடப்பது தொடர்பாக டவுன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது தொடர்பாக திருவாரூர் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சம்பவத்தில் இந்த குழந்தை குப்பைமேட்டில் அனாதையாக வீசப்பட்டதாக தெரியவந்ததன் பேரில் அந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாத காலமாக மருத்துவமனையில் இந்த குழந்தை மருத்துவர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இந்த குழந்தையானது சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் சிறப்பு தத்துவள மையத்தில் கலெக்டர் சாந்தா மூலம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் சாந்தா கூறுகையில், இதுபோன்ற கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை பொது மக்கள் எவரேனும் கண்டறிந்தால் தத்து வழங்கும் நடவடிக்கையாக அருகில் இருந்து வரும் காவல் நிலையம், மருத்துவமனை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழு மற்றும் 1098 சைல்டு லைன் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்து உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குழந்தைகளை சட்டபூர்வமான முறையான தத்து எடுப்பிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு www.cara.nic.in < http://www.cara.nic.in/ > என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் அன்சாரி மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Child Special Philosophy Center ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...