×

மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை: போக்குவரத்து பாதிப்பு

குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலை இடிந்து தடுப்புகள் அந்தரத்தில் தொங்குகிறது.குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் காட்டேரி முதல் மரப்பாலம் வரை சாலையின் குறுகலான இடங்களில் விரிவாக்க பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மரப்பாலம் பகுதியில்  பொக்லைன் உதவியுடன் நெடுஞ்சாலை  துறையினர் மண் அகற்றி வந்துள்ளனர். நள்ளிரவில் திடீரென மண்சரிவால் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.  சாலையின் தடுப்புகள் அந்தரத்தில் தொங்கிவருகிறது. இதனால் அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையின் ஒரு பகுதியை தடை செய்து ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் செல்ல  அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடிந்த சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்….

The post மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Marapalam ,Coonoor ,Coonoor Mettupalayam ,Dinakaran ,
× RELATED குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம்