×

வல்லவாரியில் டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி புதிய மின்கம்பங்கள் அமைப்பு

அறந்தாங்கி, பிப். 11: தினகரன் செய்தி எதிரொலியாக வல்லவாரியில் விழும் நிலையில் இருந்த டிரான்ஸ்பார்மரை மாற்றியமைக்க புதிதாக மின்கம்பங்கள் பதிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அடுத்த வல்லவாரி கிழக்கு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கியுள்ள மின்கம்பங்களில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து காணப்பட்டது. இதனால் டிரான்ஸ்பார்மர் கீழே விழும் நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், மின்கம்பங்களில் கம்புகளை கட்டி கீழே விழாதவாறு செய்திருந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கை படங்களுடன் வெளியானது.

இதன் எதிரொலியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வல்லவாரி கிழக்கு டிரான்ஸ்மார்மரில் சேதமடைந்திருந்த மின்கம்பங்களுக்கு மாற்றாக தற்போது உள்ள இடத்துக்கு அருகே புதிய மின்கம்பங்களை அமைத்து அதில் டிரான்ஸ்பார்மரை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Vallavari New ,
× RELATED திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை