×

கலப்பு மருத்துவ முறையை எதிர்த்து மருத்துவர்கள் உண்ணாவிரதம்

அறந்தாங்கி, பிப். 11: கலப்பு மருத்துவ முறையை எதிர்த்து அறந்தாங்கியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்திய மருத்துவ சங்க அறந்தாங்கி கிளை தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் அருள்மணி. பொருளாளர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அலோபதி தனித்தனி மருத்துவ முறை இருக்கிறது. அவர் அவர்கள் தனித்தனியாக மருத்துவ பயிற்சி எடுத்து மருத்துவம் பார்க்கின்றனர். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு 3 வருடம் பயிற்சி மருத்துவம் எடுத்து மருத்துவம் பார்க்கின்றனர். அதனால் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது பொதுமக்களுக்கு ஆபத்தானது என்று வலியுறுத்தப்பட்டது.

Tags : Doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை