×

விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியல் கல்பாடி கிராமத்தில் மருந்து கடை வீடுகள் உள்பட 7 இடங்களில்அடுத்தடுத்து திருட்டு

பெரம்பலூர், பிப்.11: கல்பாடி கிராமத்தில் கடை, வீடு என 7 இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 3 வீடுகளில் மட்டும் 70 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராமத்தில் வடக்குத் தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் செல்லதுரை (48). சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். மனைவி சத்யா(33). இரண்டு பிள்ளைகளுடன் கல்பாடியில் வசி த்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை பார் ப்பதால் சத்யா அடிக்கடி அதே ஊரில் அருகிலுள்ள தந்தை மருதமுத்து வீட்டிற்கு சென்று தங்கி வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தந்தை வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்ற சத்யா காலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடை க்கப்பட்டு இரும்புகேட் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பயத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ அருகே வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றதும், வீட்டிலிருந்த டிவியை திருட முயன்றதும் தெரியவந்தது. அதேபோல் அதே தெருவில் சந்துப்பகுதியில் வசிக்கும் கருப்புடையார் மகன் ராஜேந்திரன் (60) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு போயுள்ளது. கிழக்கு தெருவில் கந்தசாமி மகன் ஆகாஷ் (35) என்பவரது மெடிக்கல் ஷாப் பூட்டைத் திறந்து, கல்லாவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது.

மேலும் நடுத்தெருவை சேர்ந்த சிதம்பரம் மகன் ரவி (45), வடக்குத்தெரு பழனிவேல் மனைவி தனம், ஜெகதாம்பாள் ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்துத் திருட முயற்சி நடந்துள்ளது. இந்த வீடுகள் அனைத்திலும் ஆட்கள் இல்லாமல் பூட்டிக் கிடந்துள்ளது. அதேநேரம் வடக்குத் தெரு சடையப்பன் வீட்டில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் செல்வதற்காக மர்மநபர்கள் ஸ்டார்ட் செய்து, திருட முயன்றபோது பக்கத்து வீட்டு நபர் வெளியே சிறுநீர் கழிக்க வந்ததால் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். கல்பாடி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு 6 வீடுகளில் மர்ம நபர்கள் நடத்திய கொள்ளை முயற்சியில், 3 வீடுகளில் ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : places ,road blockade Theft ,village ,pharmacy houses ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்