×

கிரீடு மையத்தில்செயல்விளக்க பயிற்சி அங்கக வேளாண்மையில் விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பெறுவது எப்படி?

ஜெயங்கொண்டம், பிப்.11: ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின்கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் அங்கக வேளாண்மை குறித்த விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக விவசாயிகள் 50 பேர் சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தலைமை வகித்து பேசுகையில், வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பண்ணை நிலங்களில் அங்கக உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது இரட்டிப்பு இலாபம் கிடைக்கிறது.

மேலும் அங்கக உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல் நஞ்சில்லா உணவினை விவசாயிகளாகிய நீங்களும் உற்பத்தி செய்யலாம் என்று கூறினார்.கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் பூச்சியல் வல்லுநர் அசோக்குமார் பேசுகையில், உயிரியல் சார்ந்த இடுபொருட்களைக் கொண்டு விதை நேர்த்தி, பஞ்சகாவ்யா தயாரிப்பு மற்றும் தாவர பூச்சி விரட்டி தயாரிப்பு, மண்புழுஉரம் தயாரிப்பு, அதன் தொழில்நுட்பம் குறித்தும் செயல்விளக்கம் மூலமும் எடுத்துக் கூறினார். வட்டார தொழில் நுட்பமேலாளர் சகாதேவன் வரவேற்று அங்கக வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள் மற்றும் அங்கக கழிவுகள் ஆகியவற்றை கொண்டு சுற்றுசூழலின் ஆரோக்கியத்தை காக்க வேண்டும் எனக் கூறினார். ஜெயங்கொண்டம் வானத்திரையன்பட்டினம் சில மற்றும் தேவமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Creed Center ,
× RELATED ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு 1500 டன் பச்சரிசி மூட்டைகள் வந்தது