×

தொழுதூரில் விவசாயிகளுக்கு இயற்கை சார்ந்த நெற்பயிரில் பயிர் மேலாண்மை பயிற்சி

சீர்காழி, பிப். 11: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்தில் இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஆதிதிராவிடர் துணை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகண்ணன் முன்னிலை வகித்தார்.

தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகர் பங்கேற்று விவசாயிகள் நெற்பயிரில் என்னென்ன பிரச்னைகள் சந்திக்கிறார்கள், நெற்பயிர்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து எடுத்து கூறினார். பின்னர் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் தொழுதூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : Natural Paddy Paddy for Farmers ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு