சீர்காழி அருகே உலக புகழ்பெற்ற நாங்கூர் 11 பெருமாள் கோயில்களில் நாளை கருட சேவை

சீர்காழி, பிப். 11: சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 11 திவ்யதேச கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் கருடசேவை உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கருடசேவை உற்சவம் நாளை (12ம் தேதி) இரவு நடக்கிறது. இந்த விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள நாராயண பெருமாள், குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பொருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய பெருமாள் என 11 பெருமாள்களும் நாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருளுவர். பின்னர் இரவு 12 மணியளவில் மணவாள மாமூனிகள், திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளுவார்.

பின்னர் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும், மாமூனிக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் 11 பெருமாள்களும் அணிவகுத்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவையொட்டி கோயில்கள் முன்பு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்தது. மேலும் விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படவுள்ளது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>