×

பழையாறில் 50 ஆண்டுகளாக குடியிருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் திமுக கூட்டத்தில் வலியுறுத்தல்

கொள்ளிடம், பிப். 11: கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை வகித்தார். கொள்ளிடம் ஒன்றிய பொறுப்பாளர் மலர்விழி திருமாவளவன், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.

மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு மாநில சிறுபான்மை அணி செயலாளர் மஸ்தான் கூறியதாவது, புதுப்பட்டினம், பழையாறு கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்படும். பழையாறு கிராமத்தில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மீனவ குடும்பங்களுக்கு இதுவரை சொந்த வீட்டுமனை பட்டா இல்லை. பழையாறு முகத்துவாரத்தை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்றி தரப்படும் என்றார்.முன்னாள் எம்எல்ஏக்கள் வக்கீல் பன்னீர்செல்வம், டாக்டர் பன்னீர்செல்வம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், மணிமாறன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லதா சுப்பிரமணியன் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.

இதேபோல் ஆனைக்காரன்சத்திரம், பழையபாளையத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதா தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் பழனியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து பழையாறு முகத்துவாரத்தை படகில் சென்று மஸ்தான் ஆய்வு செய்தார்.

Tags : meeting ,fishermen ,DMK ,families ,Palaiyar ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...