×

மாத உதவித்தொகை ரூ.3,000 கேட்டு தரங்கம்பாடியில் 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தரங்கம்பாடி, பிப். 11: மாத உதவித்தொகை ரூ.3,000 கேட்டு தரங்கம்பாடியில் 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தரங்கம்பாடி வட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தரங்கம்பாடி வட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3,000 வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் 5 சதவீத வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

சீர்காழி: சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சீர்காழி வட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். சீர்காழி நகர செயலாளர் சுரேஷ்குமார், துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் நேறறு முன்தினம் குடியேறும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் போலீசார் அடைத்தனர்.  நேற்று முன்தினம் மாலை அவர்களை விடுதலை செய்தபோது 55 பேர், மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து விட்டனர். மேலும் அங்கிருந்தபடியே நேற்று இரண்டாம் நாள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது கோரிக்கைகள் நிறைவேறும் வரை மண்டபத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

Tags : Tharangambadi ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...