வாகனங்கள் செல்ல முடியாமல் திணறல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள போக்குவரத்து பனிமனை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல சங்கத்தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சகாதேவன், நாகலட்சுமி, மணி, ராஜேந்திரன், ஹரிந்திரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பொருளாளர் இளங்கோ நன்றி கூறினார்.

போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஒய்வூதியம் பணப்பலன்கள் வழங்காமல் உள்ளது. பஞ்சப்படி உயர்வு 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதால், ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

>