×

சேலத்தில் வரும் 15ம்தேதி அதிமுக பகுதி செயலாளர் மகன் திருமணம் முதல்வர் நடத்தி வைக்கிறார்

சேலம், பிப்.11:  சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக செயலாளரும், முன்னாள் மண்டல குழுதலைவருமான தியாகராஜன்- கிருஷ்ணவேணி ஆகியோரது மகன் மனோவுக்கும், பெரியபுதூர் ராஜராஜன் நகரை சேர்ந்த சீனிவாசன்- மல்லிகா ஆகியோரது மகள் பூஜா வித்யக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வருகிற 15ம்தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மல்லமூப்பம்பட்டி சுந்தர்நகரில்  தனபாக்கியம் மஹாலில் நடக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் மாநகர் மாவட்ட அதிமுக செலயாளர் ெவங்கடாசலம் எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். முன்னதாக 14ம்தேதி(ஞாயிறு) மாலை பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை தியாகராஜன்- கிருஷ்ணவேணி, ரமேஷ், தேவி மற்றும் சீனிவாசன், மல்லிகா உள்ளிட்ட குடும்பத்தினர் செய்து வருகின்றனர். ..

Tags : Chief Minister ,wedding ,Area Secretary ,AIADMK ,Salem ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...