நாமக்கல்லில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், பிப்.11: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இன்று (11ம்தேதி) மாலை 5 மணிக்கு நளா ஓட்டலில் நடைபெறுகிறது. இதில், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட அளவிலான சார்பு அணி அமைப்பாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>