×

புதுப்பட்டியில் திமுக சார்பில் கபடி போட்டி

நாமகிரிப்பேட்டை,பிப். 11: நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி நிங்கனாங்கரடு பகுதியில், திமுக சார்பில் காபடி போட்டி நடைபெற்றது. போட்டிக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமசுவாமி தலைமை தங்கினார். ஆர்.புதுப்பட்டி பேரூர் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு நாமக்கல் திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமாரின் சார்பில் 5001, மற்றும் இரண்டாம் பரிசு நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர்  ராமசுவாமி சார்பில் 4001, 3ம் பரிசு பேரூர் பொருளாளர் செல்வராஜ் 3001 என பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் வில்வகுமார், நிங்கனாங்கரடு பகுதி உறுப்பினர்கள் பாலுச்சாமி, மணிகண்டன், யுவராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Pudupatti ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி