குமாரபாளையத்தில் திமுக ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம், பிப்.11: குமாரபாளையத்தில், நேற்று திமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் செல்வம் வரவேற்றார். வருகிற 13ம் தேதி குமாரபாளையத்திற்கு வருகை தரும் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பியை வரவேற்க, சிறப்பான பிரசார பயணனம் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர்இ மறைந்த வார்டு செயலாளர் கனகராஜூக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர நிர்வாகிகள், நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, தொழில்நுட்ப அணி, மகளிரணி உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பொறுப்பு குழு உறுப்பினர் அன்பரசு நன்றி கூறினார்.

Related Stories:

>