நாமக்கல்லில் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

நாமக்கல், பிப்.11: நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை, தேர்தலாக பார்க்காமல் நமது எதிர்காலமாக பார்க்க வேண்டும். ராகுல்காந்தியின் பிரசாரம், தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றினால் மட்டுமே தேசம் வளரும்,’ என்றார்.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் டாக்டர் செழியன், முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணைத் தலைவர் டாக்டர் செந்தில், முன்னாள் ஒன்றிய தலைவர் புள்ளியப்பன், வட்டார தலைவர்கள் சிங்காரம், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>