ராசிபுரத்தில் மினி கிளினிக் திறப்பு

ராசிபுரம், பிப்.11: ராசிபுரம் அருகே, பட்டணம் பேரூராட்சி குச்சிகாட்டில், மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தொடங்கி வைத்து பேசினார். அங்கன்வாடி பணியாளர்களின் காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு அமைத்த கண்காட்சியை பார்வையிட்டார். கர்ப்பிணி பெண்களுக்கு மாதா மாதம் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், அரசு வழங்கும் மருந்து மாத்திரைகளை முறையாக உணவுடன் உட்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து, 10 கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை வழங்கினார். தாசில்தார் பாஸ்கரன், வட்டார மருத்துவர்கள் செல்வி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>