ஆர்டிஓவை இடம் மாற்றக்கோரி விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.11: கிருஷ்ணகிரியில் வருவாய் கோட்டாட்சியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ஆர்டிஓ கற்பகவள்ளியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விஏஓக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில பிரசார செயலாளர் ஜார்ஜ், மாவட்ட செயலாளர் பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தின் போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாறுதல்களில் குளறுபடியை ஏற்படுத்தும் வருவாய் கோட்டாட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், 100க்கும் மேற்பட்ட விஏஓக்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>