×

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் 14 பெண்கள் வெற்றி

 

காத்மண்டு: நேபாள நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுதேர்தலில் 14 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 165 பேர் வாக்காளர்கள் மூலம் நேரடியாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் நேபாள நாடாளுமன்றத்துக்கு அண்மையில் பொதுதேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நேபாளத்தில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவரும், ராப் பாடகருமான பாலேந்திர ஷா (35) நேபாள பிரதமராக விரைவில் பதவி ஏற்க உள்ளார். 4 முறை நேபாள பிரதமராக பதவி வகித்து வந்த கே.பி.சர்மா ஒலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் நேபாள நாடாளுமன்ற தேர்தலில் 14 பெண்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. அவர்களில் 13 பெண்கள் பாலேந்திரா ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் நேபாளி காங்கிரஸ்(என்சி) கட்சியை சேர்ந்தவர். இந்த 14 பெண்கள் என்பது மொத்தமுள்ள இடங்களில் 8 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 2022ம் ஆண்டு நேபாள நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது, தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. கடந்த 2022ல் ஒன்பது பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், அது தற்போது 14ஆக உயர்ந்துள்ளது.

Tags : Nepal parliamentary elections ,Kathmandu ,Nepali ,
× RELATED My Free Cams, Only Fans தளங்களின் உரிமையாளர் உயிரிழப்பு