கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி, பிப்.11: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் எம்பி. தாமரைச்செல்வன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், முனிராஜ், வேடம்மாள், பூங்கொடி, மாவட்ட மகளிரணி முத்துலட்சுமி, மகளிர் தொண்டரணி சிவகாமி, நகர பொறுப்பாளர் மே.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் கேஎஸ்ஆர் சேட்டு, ஏஎஸ் சண்முகம், எச்சனஅள்ளி சண்முகம், ஆறுமுகம், டாக்டர் பிரபுராஜசேகர், சித்தார்த்தன், செங்கண்ணன், சந்திரமோகன், இலக்கியஅணி பொன்.மகேஸ்வரன், தொண்டரணி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் 68வது பிறந்தநானையொட்டி, கிராமங்களில் கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கியும், மாணவர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது. வரும் 15ம் தேதி மற்றும் 16ம் தேதியில் தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு, வருகை தரும் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>