×

எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார்

சென்னை: சென்னையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. எஸ்டிபிஐ கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், விருகை மணிகண்டன் குரூப் டி.எஸ்.பசுபதி, திமுக மாவட்ட பிரதிநிதி தென்னரசு கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் இப்தார் நோன்பு திறக்கட்டது. தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரசாக், பொதுச்செயலாளர் அன்சாரி, துணைத் தலைவர்கள் முகமது சலீம், அப்துல் மஜீத், மாவட்ட செயலாளர் ராஜா முகமது, மாவட்ட பொருளாளர் அப்துல்லா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : SDBI ,Chennai ,South Chennai Northern District ,Assistance ,Vrigambakkam ,
× RELATED 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கை;...