×

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சின்னசேலம் ரயில்நிலையத்திற்கு 2,500 டன் புழுங்கல் அரிசி வந்தது

சின்னசேலம், பிப். 11:  சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் வந்திறங்கியது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் கொண்டு வரப்படும் அரிசி, உர மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்களை இறக்கிடும் வகையில் சரக்கு இறங்கு தளம் உள்ளது. இதனால் கொ ரோனா காலத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேவையான ரேஷன் அரிசி மூட்டைகள் கூட ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு வந்து, அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டு பின் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

 இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சத்தீஸ்கர் மாநிலம், ரெய்பூர் பகுதியில் இருந்து 42 ரயில் பெட்டிகளில் 51,000 மூட்டைகளில் 2500 டன் புழுங்கல் அரிசி வந்திறங்கியது. இதையடுத்து அந்த பெட்டிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சின்னசேலம் சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு தலைமையில் இறக்கப்பட்டு பின் லாரிகளில் ஏற்றி அருகில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அடுக்கி வைத்தனர்.  இந்த அரிசி மூட்டைகள் சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chinnasalem ,Chhattisgarh ,railway station ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது