×

உலகன்குளத்தில் மினி கிளினிக் முருகையாபாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வீரவநல்லூர், பிப்.11: சேரன்மகாதேவி அடுத்த உலகன்குளத்தில் மினி கிளினிக்கை முருகையாபாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.சேரன்மகாதேவி யூனியனுக்குட்பட்ட உலகன்குளம் கிராமத்தில் நேற்று மினி கிளினிக் திறப்புவிழா நடந்தது. முருகையாபாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து மினி கிளினிக்கை திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கு இலவச மருந்து பெட்டகத்தை வழங்கினார்.  இதில் வட்டார மருத்துவ அலுவலர் சரவணபிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து
கிருஷ்ணன், சங்கரகுமார், சுகாதார ஆய்வாளர் முருகன், மாவட்ட இலக்கியஅணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மகாதேவி நகர செயலாளர் பழனிக்குமார், அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, துணைச்செயலாளர் பிராங்களின், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் மாரிமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் முருகன்நயினார், வீரவநல்லூர் சிவசுப்பிரமணியன், வீகேபுரம் அருண், கூனியூர் முருகன், அம்பை மினிசூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கரலிங்கம், உலகன்
குளம் கிளை செயலாளர் மாசிலாமணி, நகர தொழில்நுட்பபிரிவு செயலாளர் மகாராஜன் மற்றும் கரிசல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு மணிமண்டபத்திற்கு சென்ற முருகையாபாண்டியன் எம்எல்ஏ அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : Murugayapandian MLA ,clinic ,
× RELATED  ராமகிருஷ்ணா பல் மருத்துவ...