களக்காட்டில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் தென்காசியில் தெருமுனை பிரசாரம்

களக்காடு, பிப்.11: களக்காட்டில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்தும், அதனை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி தணுஷ்கோடி ஆதித்தன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், முன்னாள் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் சந்திரசேகர், ஜெபஸ்டின் ராஜ், வட்டார தலைவர் அலெக்ஸ், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன், முன்னாள் வட்டார தலைவர் காளபெருமாள், முத்துராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தென்காசி: தென்காசி அடுத்த மேலகரத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிநாடார் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சங்கரகுமார், தென்காசி வட்டார தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் பால்துரை சிறப்புரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டநாதன், மாடசாமி, ஜேம்ஸ், மாவட்ட பொது செயலாளர்கள் கணேசன், காஜாமைதீன், அமைப்பு செயலாளர்கள் அகிலாண்டம், முருகன், லட்சுமணன், கண்ணன், முருகன், அமானுல்லா, சித்திரை, நயினார். செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டாரத் தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.

Related Stories:

>