கட்டுமான தொழிலாளர்கள் பொங்கல் பரிசு பெற அவகாசம் நீட்டிப்பு

நெல்லை, பிப். 11:  நெல்ைல தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பதிவு ெபற்ற கட்டுமானத் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் உணவு பொருட்கள் தொகுப்பு ஜனவரியில் வழங்கப்பட்டது. தற்போது கட்டுமான தொழிலாளர்கள் ஆண்களுக்கு வேட்டி, துண்டு, பெண்களுக்கு சேலை வழங்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பெறப்பட்டுள்ளது. இவற்றை இதுவரை வாங்காத கட்டுமான தொழிலாளர், ஓய்வூதியதார்கள் இன்று (11ம்தேதி) முதல் 14ம்தேதி வரை 4 நாட்கள்  உதவி ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் அசல் அடையாள அட்டையுடன் தாங்கள் வசிக்கும் தாலுகா அடங்கிய மையத்திற்கு முககவசம் அணிந்து சென்று போதிய இடைவெளியை பின்பற்றி ெபற்றுக்கொள்ளலாம்.  நேரில் வரமுடியாதவர்கள் அவரது சார்பு பிரதிநிதியை அனுப்பி பெறலாம்.

நெல்லை, பாளை, மானூர் தாலுகாவிற்கு உட்பட்டவர்கள் ஐகிரவுண்டு காந்திமதியம்பாள் தொடக்கப்பள்ளியிலும், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதியினர் வள்ளியூர் ஏபிஎஸ் கல்யாணமண்டபம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்திலும், அம்பை, சேரன்மகாதேவி தாலுகா பகுதியினர் அம்பையில் அப்பர் தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி தாலுகா பகுதியினர் சங்கரன்கோவில்- சுரண்டை ரோடு ஏஞ்சல் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், தென்காசி, செங்கோட்டை தாலுகா பகுதியினர் தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம், வீ.கே.புதூர் பகுதியினர் ஆலங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியிலும், கடையநல்லூர் தாலுகாவினர் கடையநல்லூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>