நாசரேத் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாசரேத்,பிப்.11: நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர் ஊமையம்மாள்(48) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களாக விடுமுறை எடுத்த நிலையில் நேற்று (புதன்) பணிக்கு சென்ற போது தூய்மை பணி பொறுப்பாளர், பெண் ஊழியரின் விடுமுறையை அனுமதிக்க மறுத்ததுடன் பணிக்கு அனுமதிக்கவில்லையென கூறப்படுகிறது.  இதையடுத்து அவருக்கு ஆதரவாக நாசரேத் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று காலை அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஊழியரின் விடுமுறையை அனுமதிக்க வேண்டும், அவருக்கு மீண்டும் பணிவழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் சுகாதாரபணிகள் குறித்த நேரத்தில் நடைபெறாமல் பெரிதும் பாதிக்கப்பட்டது.  இது குறித்து தூய்மை பணியாளர் முருகன் கூறுகையில், ‘பேரூராட்சி செயல் அலுவலர் பெண் ஊழியரின் விடுமுறையை ஏற்றதோடு தூய்மை பணியாளர் பொறுப்பாளரை மாற்றுவதாக கூறியதின் அடிப்படையில் போராட்டத்தை வாபஸ் செய்து மீண்டும் பணியில் ஈடுபட்டோம்’ என்றார்.

Related Stories:

>