வேலூர் அடுத்த புதுவசூரில் டிரைவர் வீட்டில் 8.5 சவரன், பணம் திருட்டு

வேலூர், பிப்.11: வேலூர் அடுத்த புதுவசூரில் ஆட்டோ டிரைவர் வீட்டை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த புதுவசூர் அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் ராஜவேல்(58), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 8ம் தேதி ஓட்டேரியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக, வீட்ைட பூட்டிக்கொண்டு சென்றார். அன்று மாலை 3.30 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8.5 சவரன் தங்க நகை, வெள்ளி விளக்கு, ₹10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜவேல் சத்துவாச்சாரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>