×

சாத்துமதுரை கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 10 பேர் படுகாயம்

அணைக்கட்டு, பிப்.11: வேலூர் தாலுகாவுக்குட்பட்ட அடுக்கம்பாறை அடுத்த சாத்துமதுரை கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 22ம் ஆண்டு எருதுவிடும் விழா நேற்று நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், ஆர்டிஓ கணேஷ் ஆகியோர் தலைமையில் தாசில்தார்கள் ரமேஷ், சரவணமுத்து, வருவாய் ஆய்வாளர் ரமேஷ், விஏஓ கோவிந்த் மற்றும் விழா குழுவினர் அனைவரும் விழா உறுதிமொழி ஏற்றதையடுத்து எருதுவிடும் விழா காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் வேலூர், கணியம்பாடி, பென்னாத்தூர், ஊசூர், அணைக்கட்டு, காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவர் சண்முகம் பரிசோதனைக்கு பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் விழா நடக்கும் வீதியில் குவிந்து உற்சாகத்துடன் விழாவை கண்டு ரசித்தனர். தொடர்ந்து விழாவில் கொடியசைக்கும் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த வினாடிகளில் ஓடி கடந்த காளை மாட்டின் உரியமையாளரிடம் முதல் பரிசாக ₹50 ஆயிரம், சைக்கிள், டேபில் பேன், சீலிங் பேன் உட்பட மொத்தம் 101 பரிசுகள் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்திலே இதுவரை நடந்த எருதுவிடும் விழாக்களில் அதிக மாடுகள் மற்றும் 101 பரிசுகள் வைத்து விழா நடந்ததால், ஏராளமான மக்கள் விழாவை காண குவிந்தனர். மேலும், இதில் காயமடைந்த 10 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த கணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவில் அதிக எருதுகள் பங்கேற்றதால் விழா மதியம் 2 மணியை கடந்தும் நடந்தது கொண்டிருந்தது, ஆரம்பத்தில் ஒவ்வொரு எருதுகளாக கணக்கெடுத்து பரிசோதனை செய்து கொண்டிருந்த கால்நடை மருத்துவ குழுவினர், முடிவில் கணக்கெடுக்க முடியாமல் தினறினர்.

Tags : village ,Sathumadurai ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...