×

கருங்குழி பேரூராட்சி மலைபாளையத்தில் ரூ.9.5 கோடியில் அங்கன்வாடி மையம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி மலைபாளையம் கிராமத்தில், மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.5 லட்சத்தில் அங்கன்வாடி மையம் புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. எம்எல்ஏ புகழேந்தி தலைமை தாங்கினார். கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏகலந்து கொண்டார். இதில், திமுக நிர்வாகிகள் விஸ்வநாதன், விஜய கணபதி, கிணார் அரசு, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில், பொதுமக்களிடம் எம்எல்ஏக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.

Tags : Anganwadi Center ,Karunkuli Peruradchi Malaipalayam ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது