×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டில்  வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்யில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் சார்பில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பொது துறை நிறுவனமான எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நகர தலைவர் ஜெ.பாஸ்கர் வரவேற்றார். மறைமலைநகர் நகர தலைவர் தனசேகர், காட்டாங்கொளத்தூர் வட்டார தலைவர் பவுல், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆகாஷ், மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், குமரவேல், ரியாஸ், முருகன், பாண்டியன், உமாபதி, நகர இளைஞர் அணித்தலைவர் பாலவிக்னேஷ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டன்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டமும் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் நடந்தது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமை தாங்கினார். பிசிசிஐ உறுப்பினர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் அஸ்லம் பாஷா, ஓபிசி அணி நிர்வாகி வனிதா ஆகியோர் கலந்துகொண்டு டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதும் தலைவர்கள் மீதும், மத்திய அரசு பொய் வழக்கு போடுவதை தடுக்க கோரி கோஷமிட்டனர். நிர்வாகிகள் மோகன், அருண், நாதன், அன்பு, லோகநாதன், பூபதி, கந்தவேல், யோகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். எஸ்சி, எஸ்டி துறை மாநில துணை தலைவர் ஐயப்பன் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,Congress ,districts ,Chengalpattu ,government ,Kanchipuram ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...