×

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி பெற வேண்டுமா?: தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்

 

சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கை: நமது அழைப்பை ஏற்று நல்லெண்ண கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபட்ட பிறகு, நாடு திரும்பிய ஈரானிய போர்க்கப்பலை இலங்கை அருகே அமெரிக்கா தாக்கி அழித்து 85க்கும் அதிகமானாரை படுகொலை செய்துள்ளது.

நமது விருந்தினர்களாக வந்தவர்களை; நமது இந்திய பெருங்கடலில்; போருக்கு தொடர்பு இல்லாத பகுதியில்; தாக்கி அழித்திருப்பது அறமற்ற செயலாகும். ‘இஸ்ரேல் எங்களின் தந்தை நாடு’ என செயற்கையாக சிரித்து தனது பாசிச பேரன்பை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, இவ்விஷயத்தில் மவுனம் காட்டுவது இந்தியாவின் சர்வதேச ஆளுமைக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

வங்கதேச விடுதலை போரின் போது, பாகிஸ்தானுக்கு துணை நின்ற அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி, பாகிஸ்தானின் போர் கப்பலை சிதறடித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் துணிச்சலை எண்ணிப் பார்க்கிறோம். தற்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு கூட, அமெரிக்காவிடம் அனுமதி பெறக்கூடிய நிலையில் இருக்கும் இன்றைய பிரதமரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். நரேந்திர மோடியா, சரண்டர் மோடியா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : India ,US ,Russia ,Tamimun Ansari ,Chennai ,Humanity Democratic Party ,M. Tamimun Ansari ,Sri Lanka ,
× RELATED தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை...