இம்மாத இறுதியில் குமரி வரும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு

மார்த்தாண்டம், பிப்.10: குமரி  மேற்கு மாவட்ட காங்கிரஸ்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,  மார்த்தாண்டம்  சாங்கையில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை  அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை  வகித்தார்.  கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் வட்டார  அளவில் கருங்கல், காப்பிக்காடு, நித்திரவிளை, குழித்துறை, களியக்காவிளை,  குலசேகரம், தக்கலை உள்பட 11 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம், மாலை நேர தர்ணா  போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த மாதத்தின் இறுதியில் குமரி  மாவட்டத்துக்கு வரும்  ராகுல் காந்திக்கு  மாவட்ட எல்லையான களியக்காவிளை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு  அளிப்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில்  குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விஜய்  வசந்த்,  நிர்வாகிகள் பால்ராஜ், ஆஸ்கர்பிரடி, மாநில செயலர் ஜார்ஜ்  ராபின்சன்,  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் சர்மிளா ஏஞ்சல், லூயிஸ்,  அம்பிளி, மாநில  பொதுக்குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட ஓபிசி  பிரிவு தலைவர் ஆர்.  ஸ்டூவர்ட்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Related Stories:

>